தேசிய மக்கள் சக்தியின் சின்னம் இதுதான்

ஜனாதிபதித் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க,  திசைக்காட்டி தான் பெரும்பாலானவர்களுக்கு சரியான வழியைக் காண்பிப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வதே எமது இலக்காகும். அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன். நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னரும் நாட்டை சீரழிக்கும் ஆட்சி தொடர வேண்டுமா, அல்லது மாற்றம் வேண்டுமா என்பது மக்கள் கைகளிலேயே இருக்கிறது.

மாற்றத்தை ஏற்படுத்தி தேசிய மக்கள் சக்தியாக நாம் தயாராக இருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் ‘ திசைக்காட்டி ‘ சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். திசைக்காட்டி தான் பெரும்பாலானவர்களுக்கு சரியான வழியைக் காண்பிக்கிறது. மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்தில் மக்களை எம்முடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!