மன்னார் உயிலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் 

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட, உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய மருந்து வழங்குனர் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து, அப்பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு, அப்பகுதியில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த மக்கள், வைத்திய தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.

குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு, இன்றுவரை நிரந்தர வைத்தியர் இல்லை.

இந்த நிலையில், சுகாதார பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றி வந்த மருந்து வழங்குனர், திடீர் என இடமாற்றம் பெற்றுள்ளார்.

பதில் கடமைக்கு, மருந்து வழங்குனர் நியமிக்கப்படாத நிலையில், இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது, உடனடியாக உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு, நிரந்தர வைத்தியர் ஒருவரையும், மருந்தாளர் ஒருவரையும் நியமிக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், முருங்கன் வைத்தியசாலைக்கு 7 கிலோ மீற்றர் தூரமும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 14 கிலோ மீற்றர் தூரமும் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!