நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் தொடரும்-பிரதமர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (06) மாலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் புதிதாக அதிகாரத்தை பெற்றுக்கொள்ள தேவையில்லை எனவும் மாறாக இருக்கும் அதிகாரத்தை பலபடுத்திக்கொள்வதே அவசியம் எனவும் தெரிவித்தார்.

மொட்டு கட்சிக்கு தலை தூக்க இடமில்லை என்பதால் சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகளை இதற்கு மேலும் குறைப்பது எவ்வாறு என எதிர்க் கட்சியினர் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இது குறித்து பொதுவெளியில் கருத்துகளை தெரிவிக்குமாறு மக்களின் வயிற்றில் அடித்து அடித்து பழகி போனவர்கள் மீண்டும் அதனை செய்ய அதிகாரத்தை கேட்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெறுவது இலகுவானது என தெரிவித்த பிரதமர் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்றுள்ள முன்னேற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!