மட்டு,கரவெட்டி சமுர்த்தி வங்கியின் வாணி விழா    

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கியில், வாணிவிழா நேற்று நடைபெற்றது.

வங்கி முகாமையாளர் அசோக்குமார் பிரியதர்சினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அ.கு.ராமுராஜ் வாமதேவ சிவாச்சாரியார் கலந்துகொண்டு பூசைகளை நடாத்தினார்.

இதன்போது வங்கி ஊழியர்களால் விஜயதசமியை புகழ் கூறும் பாடல்கள் பாடப்பட்டதுடன், சகலகலா வல்லிமாலை பாடல்களும் பாடப்பட்டன.

இந்நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, வங்கி நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமென விசேட பிராத்தனையும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!