முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  விசாகப்பட்டினத்தில் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமானது

முதல் இன்னிங்சில் இந்தியா 502 ஓட்டங்களும்,தென்ஆப்பிரிக்கா 431 ஓட்டங்களும் எடுத்தன . 71 ஓட்டங்களில் முன்னிலையில் 2-வது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 323 ஒட்டங்களுடன் (டிக்ளேர்) செய்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 395 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

395 ஓட்ட இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 4-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 11 ஒட்டகளுடன்,எய்டன் மார்க்ராம் (3 ஓட்டம் ), தேனிஷ் டி புருன் ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

5-வது மற்றும் கடைசி நாள் போட்டி  நேற்று நடந்தது. ட்ரோ செய்யும் முனைப்புடன் களம் கண்ட தென்ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் மிரள வைத்தனர்.

2-வது இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 191 வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா . முத்துசாமி 49 ஒட்டகளுடன் (108 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 203 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது . முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் எடுத்தனர் . இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து இந்திய வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 10-திகதி புனேயில் ஆரம்பமாக உள்ளது .

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!