அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டிக் கௌரவிப்பு   

கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் அனுமதியுடன், நிலா பவுண்டேசனின் அனுசரணையில் சர்வதேச சிறுவர் தினமும், அம்பாறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும், அம்பாறை மசூர் மௌலான மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

நிலா பவுண்டேசன் தலைவர் எம்.ஏ.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெப்பையும், விசேட அதிதியாக விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆரம்ப பாடசாலை மாணவர்களின் அழகிய பாடல்கள், நடனம் என்பனவும் மேடை ஏற்றப்பட்டன.

நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவின் சேவையைப் பாராட்டி கௌரவம் வழங்கப்பட்டதுடன், ஆரம்பக் கல்வித்துறைக்காக அர்ப்பணிப்புச் செய்த முன்னாள் ஆசிரியர்கள், கல்விச் செயற்பாட்டாளர்கள் என பலர் கௌரவிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!