அம்பாறையில், மூளை முடக்குவாத சர்வதேச தினம்   

மூளை முடக்கு வாத சர்வதேச தினம் நேற்று இடம்பெற்றது.

இலங்கையில் முதன் முதலாக மூளை முடக்கு வாத சர்வதேச தினம் நேற்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்திற்கான மூளை முடக்குவாத சர்வதேச தின பிரதான நிகழ்வுகள,; ஹியுமன்லின்க் விசேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், அதன் பணிப்பாளர் ஏ.கமரூதின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கை மூளை முடக்கு வாத நிறுவனத்தின் பிரதிநிதி ஜீ.வலீத், ஹியுமன்லின்க் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல்கான் உட்படபலர் கலந்து கொண்டனர்.
இங்கு மாற்றுதிறனாளி மாணவர்களிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!