அம்பாறை சம்மாந்துறையில் விபத்து: ஒருவர் பலி   

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அக்கரைப்பற்றில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் அட்டப்பளம் பெரிய பாலத்தருகில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் அட்டப்பளம் பிரதேசத்தில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த, நிந்தவூரை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!