பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும்:வளிமண்டவியல் திணைக்களம்       

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் அடைமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும், கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ,மத்திய,ஊவா,கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!