புலமைப்பரிசில் பரீட்சை: முல்லைத்தீவில் 193 புள்ளிகளைப் பெற்று அபினயன் முதலிடம்   

வைத்தியராகி மக்களுக்கு சேவையாற்றுவதே தனது இலட்சியம் என, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுக்கொண்ட, விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் ரகுதனன் அபினயன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகூடிய புள்ளியாக 193 புள்ளிகளை விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் பெற்று சாதனை படைத்துள்ளான்.

தனது வெற்றி தொடர்பில், மாணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது…

நடைபெற்ற முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றமைக்காக பெருமை கொள்கின்றேன். எனது இந்த வெற்றிக்காக உழைத்த அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி ஒரு வைத்தியராவதே என்னுடைய இலட்சியம், வைத்தியராகி தனது மக்களுக்கான சேவைகளை வழங்குவேன் என்றும் விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் ரகுதனன் அபினயன் குறிப்பிட்டார்.

இதேவேளை இம்முறை இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் இருந்து 63மாணவர்கள்
பரீட்சைக்கு தோற்றியருந்தனர்.

பரீட்சைக்கு தோற்றிய 63மாணவர்களில் 39 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அத்தோடு ஏனைய அனைத்து மாணவர்களும் 70புள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!