வவுனியா,நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரியின் வெள்ளிவிழா   

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளிவிழா கால்கோள் நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கலை கலாசார நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், வடமாகாண ஆளுனரின் செயலாளர், சி.சத்தியசீலன் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான மாலினி கிருஷ்ணானந்தன், ஜெ.தாட்சாயினி, இ.நித்தியானந்தன், பிரதேச கலாசார, கலாசார உத்தியோகத்தர் வீரசிங்கம் பிரதீபன், வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன், உதவிக்கல்விப் பணிப்பாளர்,சுஜீவா சிவதாஸ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் பணிப்பாளர் கலாசார மத்திய நிலையம், ஜெ.ஜெபராணி உட்பட பலரும் பலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!