டெலோ அமைப்பு சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை

டெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணையொன்றை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ அமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக டொலோ அமைப்பின் தலைவரான சிவாஜிலிங்கம் நேற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

இது தொடர்பில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிடும் போது “ஜனாதிபதி தேர்தலில் டெலோ அமைப்பின் சார்பாக யாருமே போட்டியிட கூடாது என தீர்மானம் எடுத்திருந்த போதும், எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இது எமது கொள்கைக்கு முரண்பட்ட செயலாகும். கட்சியையும் அவமதிக்கும் விடயம்.” என குறிப்பிட்டார்.

இருப்பினும், கட்சியை விட்டு விலகி தான் சுயாதீனமாக போட்டியிட உள்ளதாக டொலோ அமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!