ஆளுநர் வெற்றிக்கிண்ணம் 2019

ஆளுநர் வெற்றிக்கிண்ணம் 2019 கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் யாழ்ப்பாணம் – ஆவரங்காலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஆளுநரின் எண்ணக்கருவில், வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வலைப்பந்தாட்ட மற்றும் கரப்பாந்தாட்ட அணிகளுக்கிடையிலான குறித்த போட்டிகள் ஆவரங்கால் நடராஜா இராமலிங்க வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஆளுநர் வெற்றிக்கிண்ண போட்டிக்கு பிரதம விருந்தினராக உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை சிவலிங்கம் தர்சினி கலந்து சிறப்பித்தார்.

ஆளுநர் வெற்றிக்கிண்ணம் 2019 ஆரம்ப நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களான பாரதிராஜா, இயக்குனர் அமீர் ஆகியோர் கலந்துகொண்டு மங்கல விளக்கு ஏற்றிவைத்தனர்.

நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டு வீரர்களான எழில்வேந்தினி வேதுகாவலர், வேணுஜா பரமலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளை வடக்கு மாகாண ஆளுநர் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந்த போட்டியில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 11 வலைப்பந்தாட்ட ஆணிகளும், 22 கரப்பந்தாட்ட அணிகளும் பங்குபற்றியிருந்தன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!