பாரம்பரிய கலைகளை பாதுகாக்க நடவடிக்கை  

தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதற்கு, மானிடத்திற்கான அரங்க இயக்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சென்மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு, தப்புக்கலை பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் முக்கிய சடங்குகளின் போது பயன்படுத்தப்படும் தப்புக் கலையை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினர் அறிந்து அதனை பின்பற்றுவதற்கான விசேட பயிற்சி பட்டறை நேற்றும் இன்றும் பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த தப்புக்கலைக்கான பயிற்சியை இந்தியா தமிழ் நாடு தேனீ திரவிய கல்லூரியின் பேராசிரியர் கு.ரவிகுமார் வழங்கியிருந்தார்.

இந்த பயிற்சி பட்டறையில் சென் மேரிஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் அயல் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், அதிகளவான மாணவிகள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!