மன்னாரில்,’எதிர்பார்பின் இளைஞர் முகாம்’

‘எதிர்பார்பின் இளைஞர் முகாம்’ எனும் தொனிப்பொருளில், இளைஞர்களின் இயலளவு மற்றும் ஆளுமை விருத்திக்காக தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் இளைஞர் முகாம் மன்னாரில் நேற்று நடைபெற்றது.

இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு தசாப்த நிறைவை கொண்டாடும் வகையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் இளைஞர் முகாமானது, மாந்தை பிரதேச இளைஞர் கழகங்களை உள்ளடக்கி எதிர்பார்பின் இளைஞர் முகாம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

மந்தை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எஸ்.தர்சன் தலைமையில், அடம்பன் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான குறித்த இளைஞர் முகாமில் இளைஞர்களின் ஆளுமை விருத்தி, உடல் ஆரோக்கியம், உளநல விருத்தி மற்றும் தொழில் பயிற்சி தொடர்பாக விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன், நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

குறித்த இளைஞர் முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மன்னார் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.மஜித், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோக ராஜா, அடம்பன் மகாவித்தியாலய அதிபர், இலங்கை இளைஞர்கழக சம்மேளன பிரதிநிதிகளான ஜசோதரன் மற்றும் ஜோசப் நயன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், இளைஞர் முகாம் முழுவதும் சிறப்பாக செயற்பட்ட இளைஞர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!