யாழ், சங்கானையில் புதிய தபாலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் சங்கானையில் அமைக்கப்படவுள்ள புதிய தபாலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கலந்துகொண்டு தபாலக கட்டடத்திற்கான அடிக்கலை நாட்டி வைத்தார்.

குறித்த நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் மற்றும் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் சங்கானை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!