சிலம்பம் போட்டி வெற்றியாளர்கள் கௌரவிப்பு  

தேசிய ரீதியில் முதல் தடவையாக இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்ட வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் அறிவொளி கல்வி நிலையத்தில் வட மாகாண சிலம்ப சங்கத்தின் செயலாளர் சூசைநாதன் யசோதரன் நெறிப்படுத்தலில், முல்லையூர் வன்னி கவியோன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகனேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எஸ்.விஜிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு வெற்றி ஈட்டிய வீரர்களை கௌரவித்தனர்.

நிகழ்வில் வெற்றி வீரர்களின் சிலம்பம் நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!