ஹொங்கொங் வன்முறைகள் குறித்து சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும்: ஐ.நா  

ஹொங்கொங்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகள் குறித்து சுதந்திரமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் மிச்ஷெல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

ஹொங்கொங் அரசாங்கத்திற்கு எதிராக 4 மாதங்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது மிச்ஷெல் பச்லெட்டிடம் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘ஹொங் கொங் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து சுதந்திரமான மற்றும் பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முகமூடி அணிவதற்கு ஹொங்கொங் அதிகாரிகள் விதித்துள்ள தடை குறித்த கேள்விக்கு, ‘வன்முறையில் ஈடுபடுவதற்கு முகமூடியை பயன்படுத்தக் கூடாதென்றும், இந்தத் தடையை பயன்படுத்தி, குறிப்பிட்ட குழுக்களை குறிவைக்கும் செயலிலோ, கூட்டம் கூடும் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலிலோ ஈடுபடக் கூடாதெனவும்’ அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!