பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி   

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரின் முதலாவது போட்டி நேற்று லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 இலக்குகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களையும், அனுஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும், பனுக ராஜபக்ஷ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் முஹம்மத் ஹஸ்னைன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

இதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் மற்றும் இசுரு உதான தலா 3 இலக்குகளையும், வனிந்து ஹசரங்க 2 இலக்குகளையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் முதலாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!