வேட்பாளர்களுக்கு அழைப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து வேட்பாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருகைதருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்கள் அனைவரும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அது தொடர்பாக தெளிவுபடுத்துவற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!