ஈராக் போராட்டம்: உயிரிழப்பு 93 ஆக உயர்வு!

ஈராக் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளது.

ஈராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளது.

ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈராக்கில் கடந்த 5 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்தின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்த நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வன்முறை போராட்டங்கள் காரணமாக, தலைநகர் பக்தாதில் கடந்த 4 நாள்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, நேற்று தளர்த்தப்பட்டது.

எனினும், மீண்டும் போராட்டம் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல், மோசமான அரசு சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தாதில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய போராட்டம், கலவரமாக மாறி தற்போது அந்தப் போராட்டங்கள் சற்று தணிந்திருந்தாலும், பதற்றநிலை தொடர்கின்றது.

தனது தோல்விகளுக்கு பொறுப்பேற்று, பிரதமர் அதெல் அப்தெல் மஹிதி பதவி விலக வேண்டும் என்று அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க மதத் தலைவர் மக்தடா சாதர் வலியுறுத்தியதையடுத்து பதற்றம் அதிகரித்திருந்தது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!