யாழில் சிறுவர் தின நிகழ்வு

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தலைமையகம் மற்றும் 56ஆவது படைப்பிரிவு என்பன இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வுகள், இன்று காலை யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய கலந்துகொண்டார்.

நிகழ்வில் யாழ்ப்பாணம் புதிய ஜப்பான் பிரதேசத்தை சேர்ந்த 200 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், சித்திரம் வரைதல் போன்ற போட்டிகளும் இடம்பெற்றன.

போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இராணுவ தளபதியினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட படை உயரதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!