புதுக்குடியிருப்பு தவிசாளர் பொதுமகனை தாக்கவில்லை: சமூக வலைத்தள செய்திகளுக்கு மறுப்பு வெளியீடு   

தவிசாளர் மீது அவதூறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டு, அத்து மீறி காணொளிப் பதிவு மேற்கொண்டமையாலேயே புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், பொதுமகன் ஒருவரை எச்சரித்தார் என சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிறேமகாந் பொதுமகன் ஒருவரை தாக்கினார் என அண்மையில், சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் காணொளிக் காட்சி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பிரதேச சபையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமையாலே, தவிசாளர் குறித்த நபரை எச்சரித்தார் என்றும்,அத்துமீறி காணொளி எடுத்தமையைக் கண்டித்து தொலைபேசியை தட்டி விட்டார் எனவும், குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இருந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியதோடு, அத்துமீறலை பார்வையிட சென்ற அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முறிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் செ.பிறேம்காந் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!