20 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஓல்டன் பிரதான வீதியின் நோர்வூட் மேற்பிரிவு பகுதியில், வீதியை விட்டு விலகி 20அடி பள்ளத்தில் கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் நேற்றிரவு பத்து மணியளவில் இடம்பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனில் இருந்து மஸ்கெலியா சாமிமலை பகுதியை நோக்கி பயணித்த கார், அதிக வேகமாக பயணித்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், காரில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!