வட மாகாண கலாசார விழா 

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலரும் கலாசார பேரவையின் தலைவருமான சண்முகராஐh சிவசிறி தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபமான அமரர் கலாநிதி என்.கே.பத்மநாதன் அரங்கில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு கலாசார பண்பாட்டு முறையில் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில் தெல்லிப்பழை உதவி பிரதேச செயலர், யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் சி.ரமணராஜா, யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி அதிபர் தி.வரதன், உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்ததர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!