தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிப்பு   

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வருமானம் குறைந்த வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் குழுத்தலைவர் ஜாட்சன் தலைமையில் நேற்று குறித்த நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

மன்னார் – வவுனியா பிரதான வீதியின் எல்லை கிராமங்களான கண்ணாட்டி, பெரியகட்டு, பிரமணாலங்குளம், நீளியாமோட்டை, கூழங்குளம், வடகாடு, தம்பனைவீதி, கல்லுமலை ஆகிய கிராமங்களில் தொடர்சியாக வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட மக்களுக்கு கிராம சேவகர்களின் தெரிவின் அடிப்படையில் 17 லட்சம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களான மா, அரிசி, சீனி, தேயிலை அடங்கிய நிவாரண பொதிகளே தெரிவு செய்யப்பட்ட 500 மேற்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிவாரண பொருட்கள் கண்ணாட்டி பங்குத்தந்தை, கிராம சேவகர்கள், மெசிடோ நிறுவன ஊழியர்களால் பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!