உக்ரைனில் விமான விபத்து:ஐவர் உயிரிழப்பு!

உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் இல்லாத காரணத்தால் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான குறித்த விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், லிவில் விமான நிலையத்தை அடைய 1 கிலோ மீற்றர் தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றாக தீர்ந்த நிலையில் விமானம் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சரக்கு விமானத்தில் பயணம் செய்த ஐவர் உயிரிழந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!