வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினத்தில் விசேட பாதுகாப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினமான நாளை மறுதினம் தேர்தல் ஆணைக்குழு அலுவலக பகுதியில் 1,700 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சகருமாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் தினத்தில் ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்காக தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆதரவாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள் என்று ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் பொலிஸாரை கொண்ட குழு ஒன்று தேர்தல் அலுவலகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவர்களுக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியகட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினத்தன்று விஷேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!