மட்டு காங்கேயனோடை பள்ளிவாயலில் புதிய கட்டடம் திறப்பு!

மட்டக்களப்பு மண்முனைப்பற்று காங்கேயனோடை பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட மஸ்ஜிதுல் மினன் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டு முதல் ஜும் ஆ தொழுகையும் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாயலின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனையடுத்து முதல் ஜும் ஆ பிரசங்கத்தையும் ஜும் ஆ தொழுகையையும் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும் ஆ பள்ளிவாயலின் இமாம் மௌலவி பாஸில் முப்தி நடாத்தி வைத்தார்.

பள்ளிவாயலின் தலைவர் ஏ.ஜி.எம்.சாஹீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், மண்முனைப் பற்று பிரதேச சபையின் காங்கேயனோடை வட்டார உறுப்பினர் ஏ.பி.எம்.றசீம் உட்பட மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பள்ளிவாயல் நிர்வாகத்தினரால்; கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!