காத்தான்குடியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, டிப்பர் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

நேற்றையை தினம், கொக்கட்டிச்சோலையிலிருந்து சட்டவிரோதமான முறையில் காத்தான்குடிக்கு டிப்பர் வாகனத்தில் மணலைக் கடத்தி வந்த போதே பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் டிப்பர் வாகனமும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!