கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பளாருமான கோட்டபாய ராஜபக்ஸவை, இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று காலை 9.30-க்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
கோட்டபாய ராஜபக்ஸவிற்கு இரட்டை பிராஜாவுரிமையை வழங்கும் வகையில், 2005 ஆம் அண்டு நவம்பர் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் சட்டப்பூர்வமற்றது அல்லது போலியானது என தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, கோட்டபாய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதென, இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இதேவேளை, நீதிமன்ற பகுதி பரபரப்பாக காணப்படுகின்றது.

பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கலகமடக்கும் பொலிஸாரின் வாகனங்களையும் அப்பகுதியில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலரும் அப்பகுதியில் கூடியுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!