கோட்டாவின் வழக்குக்கும் ஐ.தே.கவுக்கும் தொடர்பு இல்லை – கிரியெல்ல!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்க எதிரான மனுவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தொடர்பு இல்லை எனவும், சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை சிதறடிப்பற்காக, ஐக்கிய தேசிய கட்சி, சில்லரைத்தனமான செயற்பாட்டில் ஈடுபடாது எனவும், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கான, அலுவலகம் ஒன்றை, கண்டியில் திறந்து வைத்து உரையாற்றிய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த மனுவுடன் எமக்கு எந்த வித தொடர்பும் இல்லை. சிவில் அமைப்பு ஒன்றே இதனை தாக்கல் செய்துள்ளது.
இந்த நாட்டில் சுயாதீன நீதிமன்றம் உள்ளது.

சிவில் அமைப்பு ஒன்றே இதில் ஈடுபட்டுள்ளதே தவிர எங்களுக்கு தொடர்பில்லை. நாங்கள் தேர்தலை வெற்றிகொள்ள தயார்.

யார் வந்தாலும் வெற்றி பெறுவது நாங்களே. அதேபோல கோட்டபாய ராஜபக்ச போட்டியிட்டால் எமக்கு மிகவும் இலகுவாக இருக்கும். இதனை நாங்கள் எப்போதும் கூறினோம். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும் என்ற அச்சமே எமக்கு இருக்கின்றது.

அவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து, நான் சற்று ஆராய்ந்தேன். ஆகவே அவர் போட்டியிட்டால் எமக்கே நல்லது என்பதே எனது நிலைப்பாடு.

அதேவேளை சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை சிதறடிப்பற்காக, பல்வேறு வேட்பாளர்களை நாங்கள் நியமிக்கவில்லை.

அப்படியான சில்லரைத்தனமான செயற்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி செய்யாது’ என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!