யாழில், 34 வயதுடைய நபரை காணவில்லை!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில், அரசடி லேன் நெடியகாடு வல்வெட்டித்துறையில் வசிக்கும், 34 வயதுடைய கிருஸ்ணதாஸ் இளங்கோ என்பவர் காணாமல் போயுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி, இரவு 7.15 மணியில் இருந்து காணாமல் போன நபர், இதுவரை வீடு திருப்பவில்லை என, உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி, காணாமல் போனவரின் தந்தை நாகலிங்கம் கிருஸ்ணதாஸ், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன இளைஞர், சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், தந்தையார் குறிப்பிட்டார்.

இதனால், யாராவது காணாமல் போன நபரை அவதானித்தால், 077 605 89 75 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!