அம்பாறையில், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான செயலமர்வு!

தென் கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின், உயிர் முறைமையியல் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களுக்கான, ‘நற் சுகாதார முறையிலான உணவு உற்பத்தி’ செயற்பாடுகள் எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் செயலமர்வு, இன்று பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.மொஹம்மட் தாரீக் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், பீடத்தின் தலைவர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பீடத்தின் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், தம்பிலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

உணவின் பாதுகாப்பும், அதன் முக்கியத்துவமும் எனும் தொனிப்பொருளில், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில் விளக்கமளித்தார்.

‘பல்கலைக் கழகத்தின் சமூகத்திற்கான பங்களிப்பு’ எனும் தலைப்பில் பீடாதிபதி கலாநிதி முகம்மட் தாரீக் விளக்கமளித்ததுடன், உற்பத்தியாளர்களுக்கான தரச் சான்றுதழ் பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களது உணவு உற்பத்தி பொருட்களை மேம்படுத்துவதற்கான அனைத்து வகையிலுமான ஆலோசனைகள், உதவிகளை பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடவியல் வழங்கும் என்றும் இதன் போது தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!