எமது கட்சியின் நிலைப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் – சுமதிபால!

இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய தீர்மானம் எடுத்து கண்டிப்பாக எங்களுடைய நிலைப்பாடு அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாளை 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவடையும், அதன் பின்னர் நாங்கள் எங்கள் முடிவு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிப்போம்.

இந்த நட்டு மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களின் எண்ணத்தை புரிந்து செயற்படுவோம். எப்போதும் நாம் ஐக்கிய தேசிய கட்சிசிக்கு எதிராக செயட்படுவபர்கள் நாம் அதை தான் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

வேட்பாளர் என்று பார்க்கின்ற பொழுது கோட்டாபய ராஜபக்சவுடன் எங்களுக்கு ஒரு சிக்கலும் இல்லை, அதேபோல எங்களுடைய மத்திய செயற்குழு எடுத்த தீர்மானங்களுக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம், அதுபோல முக்கிய மூன்று கோரிக்கைகள் எமது செயற் குழுவில் எடுத்தோம், அது தொடர்பாக நாம் அறிவித்திருக்கின்றோம், ஒருவேளை எங்களுடைய யோசனைகள் நிராகரிக்கப்பட்டால் நாளை மீண்டும் மத்திய செயற்குழு கூடி மாற்று நடவடிக்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையும் அனைத்து கட்டிகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்கள், அதேபோல பொதுஜன பெரமுனாவுக்கு கூட்டணி அமைக்கும் பொழுது நியாமான முன்மொழிவுகள் உள்ளது. அதையும் நாம் யோசிக்கவேண்டும்.

அடுத்துவரும் தேர்தலில் நாம் கதிரை சின்னத்தில் போட்டியிட பொது எண்ணம் ஒன்று உள்ளது. எங்களுடைய தோழமை காட்சிகள் அதற்கான ஆதரவை தந்துள்ளது, அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என தெரிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!