சீரழிந்த நாட்டை முன்னேற்றும் ஐ.தே.க – மன்னப்பெரும !

கலாச்சார சீரழிவு செய்யப்பட ஒரு நாட்டைத்தான் நாம் கையில் எடுத்தோம், மக்கள் எமக்கு நாட்டை தந்தது ஜனநாயகத்தை நிலை நாட்ட என இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அன்று நாட்டை பார்க்கும்போது கடன் சுமைகள் அதிகமாக இருந்தது, சுற்றுலா பயணிகள் வந்தபொழுது அவர்களை பாலியல் துஷபிரோயகம் செய்த நாடாக இருந்தது, உலக போற்றும் தலைவராக இருந்த நவநீதன் பிள்ளை இலங்கைக்கு வந்த போது அவரை திருமணம் செய்துகொள்ள அழைப்பு விடுத்த அமைச்சர்கள் இருந்த நாடு, இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.

நீதித்துறையை கையில் எடுத்து தங்களுக்கு ஏற்ற தீர்ப்புகளை வழங்கிய நாடு, மக்கள் போராடும் போது கொலை செய்த அரசாங்கம் இருந்த நாடு, மக்கள் எங்களிடம் வீதிகளை புனரமைக்க சொல்லவில்லை ,சலுகைகள் கேட்கவில்லை, அவர்கள் கேட்டது ஜனநாயகத்தை நிலைநாட்டும் படி, நாம் அதனை செய்துள்ளோம்.

இன்று நாட்டில் நிம்மதியுள்ளது, சட்டம் சரியாக இயங்குகின்றது, அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது, மக்கள் உரிமைகளுக்காக போராட முடியுமான சூழலை நாம் அமைத்துக் கொடுத்தோம், மக்கள் எங்களுக்கு எதிராக போராட்டம் செய்தது கடந்த காலங்களில் இருந்த அரசு செய்த தவறினால் தான். என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!