கார்கில்ஸ் நிறுவனத்தினரால், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!

கார்கில்ஸ் நிறுவனத்தின் கீழ் பயணிக்கும் விவசாய குடும்பங்களில், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளில், உயர் பெறுபேறுகளைப் பெற்ற பிள்ளைகளுக்கு, கார்கிலஸ் பூட்சிற்றியினால், புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கார்கில்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் கார்கில்ஸ் பூட்சிற்றியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில், 88 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

‘கார்கில்ஸ் சாருபிமா உழவர் சமூக நன்மை மற்றும் உதவித் தொகை’ வழங்கல் எனும் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள, விவசாய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இந்த உதவித்திட்டம் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வு, கார்கில்ஸ் பூட்சிற்றியின் ‘வளம் மிக்க’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கார்கில்ஸ் பூட்சிற்றியின் முகாமையாளர் ரஞ்சித் பி.ஜே.தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், புலமைப்பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைகளில் சிறந்த சித்தியை பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும், பாடசாலை உபகரணங்கள், கல்வி ஊக்குவிப்புத் தொகை, மடிக்கணினிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், பிரதம விருந்தினராக, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட கார்கில்ஸ் பூட்சிற்றியின் உயர் அதிகாரிகள், மற்றும் யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!