ஹட்டனில், வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்!

எதிர்வரும் 27ம் திகதி தமிழ் இந்து மக்களால் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, வெளியிடங்களில் இருந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு, வர்த்த நிலையங்கள் குத்தகை அடிப்படையில் வழங்கபடும் நடவடிக்கையினை கண்டித்து ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுக்கபட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஹட்டன் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், அதில் பணிபுரிகின்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஒவ்வொரு முறையும் தீபாவளி பண்டிகை வருகின்ற போது வெளிபகுதியில் இருந்து வருகின்ற வர்த்தகர்களுக்கு குத்தகை அடிப்படையில் ஹட்டனில் உள்ள வர்த்த நிலையங்கள் வழங்கபடுகின்றமையால், தங்களை போன்ற வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கபடுவதாக தெரிவிக்கும் அப்பகுதி வர்த்தகர்கள், குறித்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தபட வேண்டும் எனவும், ஹட்டன் டிக்ககோயா நகர சபை அதற்கு அனுமதி வழங்ககூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் ஹட்டன் மணிகூட்டு கோபுரத்தில் இருந்து பேரணியாக கோஷயங்களை எழுப்பியவாறு ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு சென்றனர்.

அங்கு ஆர்ப்பாட்டகாரர்களின் கோரிக்கைக்கு எவ்வித தீர்வும் கிடைக்காமையினால், ஆர்ப்பாட்டகாரர்கள் ஹட்டன் டிக்கோயா நகரசபையில் இருந்து ஹட்டன் பிரதான பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.

இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த பிரச்சினை தொடர்பில் ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பரிசோதகரும் நிலைய பொறுப்பதிகாரியுமான ஏரத்திடம் விளக்கம் கோரிய போது, அதற்கு பதில் வழங்கிய பொலிநிலைய பொறுப்பதிகாரி, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைய குறித்த வர்த்தக நிலயத்தை வழங்கியிருந்தால் அதற்கு பொலிஸாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

எனவே சட்டவிரோதமாக வர்த்தக நிலையங்கள் வழங்கபட்டிருந்தால் அதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் என கூறினார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!