அரச அதிகாரி வீட்டில் பதிமூன்றரை டன் தங்கம்-பறிமுதல்

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சீனாவின் ஹைக்கு என்ற இடத்தில் அரச அதிகாரி ஒருவர், தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்குகிடைத்த தகவளுக்கு அமைய தேடுதல் நடத்தப்பட்டுள்ளது .

குறித்த அதிகாரியின் வீட்டை சோதனை செய்த போது குவியல் குவியலாக தங்க பிஸ்கட்டுகள், நகைகள் கண்டுபிடிக்கப்பட்ள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட பதிமூன்றரை டன் தங்க நகைகளின் மதிப்பு 530 மில்லியன் பவுண்ட் ஆகும். மேலும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 30 பில்லியன் பவுண்டு பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .

சீனாவில் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது இருந்தும் இதுபோன்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது இது முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!