ஈராக் அரசுக்கு எதிராக நடந்த போராட்டாத்தில் 9 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள்

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பாக்தாத்தில் உள்ள வரலாற்று சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் அதை மீறியும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதில் போராட்டக்காரர்கள் 9 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பாக்தாத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பாக்தாத் முழுவதும் பிரதமர் அப்துல் மஹ்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!