ஹற்றனில் புடவை விற்பனை நிலையத்தில் தீ!

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் டன்பார் வீதியில் அமைந்துள்ள புடவை விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு தீ பரவல் ஏற்பட்டதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கால் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் இரண்டாம் மாடியில் இருந்த புடவைகள் உட்பட பெறுமதியான உபகரணங்கள் தீயில் கருகியுள்ளதோடு தீயை அணைக்கச் சென்ற ஒருவர் காயமடைந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீயை ஹற்றன் டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவினர், படையினர், பொலிஸார், பொதுமக்கள் இனைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!