அம்பாறை நாவிதன்வெளியில் தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு!

தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு, அம்பாறை நாவிதன்வெளியில் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் வணிக அமைச்சின் கீழ் இயங்கும், தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை ஊடாக, அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் நெசவு உற்பத்தியில் ஈடுபடுகின்ற தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு, நாவிதன்வெளி பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இதில் சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்மனப்பாங்கு மாற்றம், திறன்விருத்தி தெளிவூட்டல் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தரும் வளவாளராகிய எஸ்.இராஜசிங்கத்தினால் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த தொழில் முயற்சியாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்கு தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.நிஜந்தன், தொழில் பயிற்சி ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்களும் கலந்துகொண்டனர்.

முயற்சி செய்யாதவரை எந்த ஒரு வழியிலும் நாம் முன்னேற முடியாது என, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!