பெரியகல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க, மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீ மிதிப்பு உற்சவம், ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று நடைபெற்றது.

இந்துமா சமுத்திரமும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் பெரியகல்லாறு பகுதியில் அற்புதங்கள் கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீவடபத்திர காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

ஐந்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் நேற்று அன்னையின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அற்புதங்கள் நிறைந்ததாகவுமுள்ள தீமிதிப்பு திருச்சடங்கு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

தேவாதிகள் ஆடிவர விசேட பூஜைகள் மற்றும் தீக்குளிக்கான பூஜைகள் நடைபெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தீ மிதிப்பு உற்சவத்தை தொடர்ந்து சக்திபூஜை நடைபெற்றதுடன் அடியார்கள் அம்பாளுக்கு பூ வைத்து வணங்கும் நிகழ்வு நடைபெற்றது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!