கோண்டாவிலில் கொலையுண்டவருக்காக கடையடைப்பு!

யாழ்ப்பாணம் கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள இரும்பக நிலைய உரிமையாளர், அண்மையில் வாள்வெட்டுக் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில், அவரது படுகொலையைக் கண்டித்து, இன்று குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி, வர்த்தகர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 6 ஆம் திகதி, மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாள்வெட்டுக் குழுவொன்று, இரும்பகத்திலுள்ள பொருள்களை நாசப்படுத்தியதுடன், மேற்படி இரும்பக நிலைய உரிமையாளர் மீதும் கடும் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

தாக்குதலில் படுகாயமடைந்த, 47 வயதுடைய இரும்பக நிலைய உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

அவரது இறுதிக் கிரியை நிகழ்வுகள், இன்று இடம்பெற்ற நிலையிலேயே, உப்புமடம் பகுதி வர்த்தகர்கள், தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!