கட்சி மாறுவதாக வந்த தகவல் உண்மை இல்லை : புஞ்சி நிலமே!

கடந்த சில நாட்களாக, கட்சி மாறப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மை இல்லை என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.

நேற்று, திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில், இம்மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும், நான் அரசியல் வேலை செய்து கொண்டிருக்கின்றேன்.

நான் யாருக்காக வேலை செய்கின்றேன் என்பது எல்லோருக்குமே தெரியும். பொது வெளியிலோ தனிப்பட்ட ரீதியாகவோ எவரும் என்னை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைக்கவில்லை.

எனக்கும் தெரியாமல், நான் கட்சி மாறுவதாக வந்த செய்தியை மறுக்கின்றேன். 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர், நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே பாராளுமன்றத்திற்கு தெரிவானவன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனினும் அந்தக்காலம் தொடக்கம், என்னுடன் ஐக்கிய தேசிக் கட்சியில் பயணம் செய்த, நான் நேசிக்கின்ற, என்னுடன் தோழமையுடன் தொடர்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எவரும், கட்சி மாறுமாறு கேட்கவில்லை.

ஆனால் என்னுடன் உறவில்லாத, என்னுடன் தொடர்பில்லாத, அனுராதபுர ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சந்திராணி பண்டார, ஊடகங்களுக்கு நான் கட்சி மாற இருப்பதாக தெரிவித்திருப்பதை நான் வன்மையாக கண்டிப்பதோடு, அவர் கூற்றில் உண்மை இல்லை என்பதையும் இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!