வட கொரியாவில், ஏவுகணை பரிசோதனை!

அமெரிக்காவுடன் புதிதாக அணுசக்தி பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, வட கொரியா அறிவித்து ஒரு சில மணி நேரத்தில், வட கொரியா, நேற்று அதிகாலை ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள், ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி, பிராந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏவுகணைப் பரிசோதனை குறித்து அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.

வொன்ஸன் துறைமுகத்திற்கு அருகில், நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட இந்த புககுக்சோங் வகையைச் சேர்ந்த ஏவுகணை, சுமார் 450 கிலோமீற்றர் தூரத்திற்கு, அதாவது 910 கிலோமீற்றர் உயரம் வரை பயணித்து, ஜப்பானிய கடலில் விழுந்துள்ளதாக, தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கையோங் டூ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன், செயற்படு மட்ட பேச்சு வார்த்தைகளை, எதிர்வரும் 5 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக, வட கொரியா அறிவித்து ஒரு நாளில், இந்த ஏவுகணைப் பரிசோதனை இடம்பெற்றுள்ளமை குறித்து, தென் கொரிய தேசிய பாதுகாப்புச் சபை கவலையடைந்துள்ளதாக, அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஏவுகணை ஏவப்பட்டு, இரண்டாகப் பிளவடைந்து கடலில் விழுந்ததாக தோன்றுவதாக, ஜப்பான் அமைச்சரவை தலைமைச் செயலாளர் யொஷ் ஹைட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட கொரியா, கடந்த ஜூலை மாதத்திலிருந்து குறைந்தது 7 ஏவுகணைகளை ஜப்பானிய கடலுக்குள் ஏவிப் பரிசோதித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!