புகையிரத சேவை தொடர்பான விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியீடு!

புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.


இந்நிலையில் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனை அச்சிடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல், புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புகையிரத ஊழியர்கள் தொடர்ச்சியாக, இன்று 8 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதனால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பொது மக்கள், பெரும் அசௌகரியர்களை எதிர்கொண்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!