மக்களுக்காக சேவையாற்றுவேன் – சஜித்!

உயிர் உள்ளவரை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தனது ஆற்றலையும், அர்பணிப்புகளையும் மற்றும் பலத்தையும் முழுவதுமாக நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு செழிப்பான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க தான் முற்றுமுழுதாக தன்னை அர்பணிப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒருவனாக நான் இருப்பேன், இன, மத, பேதங்கள் இல்லாத முறையில் மக்களை பாதுகாப்பதாக தெரிவித்த அவர் இந்த நாட்டின் குழந்தைகளுக்கு, தாய் மார்களுக்கு பெற்றுக்கொடுக்கத்தக்க பல சலுகைகள் பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரேரித்ததுடன் அதற்கு மாநாட்டில் இருந்தவர்கள் ஏகமனதாக அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!