மட்டு மண்முனைப்பற்று, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று மண்முனைப் பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் உட்பட உதவி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை பிரதேச சபை உறுப்பினர்கள், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள், திணைக்கள அதிகாரிகள், சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது, இவ்வருடம் மண்முனைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் கல்வி சுகாதார சமுர்த்தி வாழ்வாதாரம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் டெங்கு பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாக, பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!