வவுனியாவில், உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரவிற்குட்பட்ட, புதுவிளாங்குளம் பகுதியில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், யானை இனங்காணப்பட்டுள்ளது.

சிவன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில், யானை உயிரிழந்த நிலையில் காணப்படுவதை அவதானித்த பொது மக்கள், கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்ததுடன், யானை இறந்தமை தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!